பொகவந்தலாவையில் சுகாதார விதிமுறைகளை மீறி இனிப்பு பண்டங்களை விநியோகித்தவருக்கு அபராதம்

பொகவந்தலாவையில் சுகாதார விதிமுறைகளை மீறி இனிப்பு பண்டங்களை விநியோகித்தவருக்கு அபராதம்

பொகவந்தலாவையில் சுகாதார விதிமுறைகளை மீறி இனிப்பு பண்டங்களை விநியோகித்தவருக்கு அபராதம்

எழுத்தாளர் Staff Writer

23 Aug, 2014 | 7:23 pm

பொகவந்தலாவையில் சுகாதார விதிமுறைகளை மீறி இனிப்பு பண்டங்களை விநியோகம் செய்த ஒருவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

குறித்த விநியோகஸ்தரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து ஏழாயிரத்து 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாக பொகவந்தலாவ பிராந்தியத்திற்கான தலைமை சுகாதா பரிசோதகர் பீ.கே.வசந்த தெரிவித்தார்.

மேலும் கைப்பற்றப்பட்ட இனிப்பு பண்டங்களை உற்பத்தி செய்யததாக கூறப்படும் நிறுவனத்தின் உரிமையாளரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொகவந்தலாவை சுகாதார பணிமனையின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்து நேற்று பிற்பகல் குறித்த விநியோகஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விநியோகஸ்தரிடம் கைப்பற்றப்பட்ட யோகட் உள்ளிட்ட இனிப்பு பண்ணடங்களுக்கு நீதிமன்றத்தால் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை சுகாதா பரிசோதகர் பீ.கே.வசந்த சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்