புத்தளத்தில் ரயிலில் மோதி இளைஞர் மரணம்

புத்தளத்தில் ரயிலில் மோதி இளைஞர் மரணம்

புத்தளத்தில் ரயிலில் மோதி இளைஞர் மரணம்

எழுத்தாளர் Staff Writer

23 Aug, 2014 | 7:03 pm

புத்தளம் பாலாவி ரயில் நிலையத்திற்கு அண்மையில் மோட்டார் சைக்கிலொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாதுகாப்பற்ற ரயில் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட சந்தர்பத்தில் இன்று காலை எட்டு மணியளவில் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரயில் விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் நீதவான் விசாரணைகளுக்கு பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

முந்தல் கரிக்கட்டை பகுதியை சேர்ந்த 29 வயதான ஒருவரே ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்து தொடர்பில் முந்தல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்