தெல்லிப்பளையில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

தெல்லிப்பளையில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

தெல்லிப்பளையில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

23 Aug, 2014 | 9:58 am

மழை பெய்துகொண்டிருந்த வேளையில் மின்சாரம் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் ஆபத்தான நிலையில் யாழ். தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இளவாலை – சித்திரமேளி சந்தியில் நேற்றிரவு ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை மின்சார சபையின் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மட்டுவில் பகுதியைச் சேர்நத 26 வயதான ஒருவரே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

ஆபத்தான நிலையில் தெல்லிப்பளையில் அனுமதிக்கப்பட்ட ஏனைய இரண்டு பேரும், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்