தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை

எழுத்தாளர் Staff Writer

23 Aug, 2014 | 1:13 pm

இந்தியாவிற்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரநிதிகள் குழுவினர், பிரமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகள், 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நரேந்திர மோடியிடம் கலந்துரையாடியிருப்பதாக இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இந்தியாவின் பங்களிப்பு செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து கூட்டமைப்பினர் எடுத்துக்கூறியுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன். பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், சுரேஷ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன், பொன் செல்வராசா உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் புதுடில்லியை சென்றடைந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்