சக்தி வளாகத்தின் ஆறாம் நாள் நிகழ்வுகள் இன்று

சக்தி வளாகத்தின் ஆறாம் நாள் நிகழ்வுகள் இன்று

சக்தி வளாகத்தின் ஆறாம் நாள் நிகழ்வுகள் இன்று

எழுத்தாளர் Staff Writer

23 Aug, 2014 | 3:55 pm

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள சக்தி வளாகத்தின் ஆறாம் நாள் நிகழ்வுகள் இன்று இடம்பெறுகின்றன.

அலங்காரக் கந்தனின் இரதோற்சவப் பெருவிழா நடைபெறவுள்ள நாளைய தினம் வரை யாழ். சக்தி வளாகத்தை நேயர்கள் பார்வையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றும் நாளையும் யாழ். நல்லூர் சக்தி வளாகத்திலுள்ள நியூஸ் பெஸ்ட்டின் விசேட கலையகத்தில் திரைப்பரீட்சை மற்றும் குரல் தேர்வு நடைபெறவுள்ளன.

இந்த திரைப்பரீட்சை மற்றும் குரல் தேர்விலிருந்து தெரிவு செய்யப்படும் இருவருக்கு நியூஸ் பெஸ்ட்டில் செய்தி வாசிப்பதற்கான அரிய வாய்ப்பு கிட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, இன்றும் நாளையும் யாழ். நல்லூர் சக்தி வளாகத்திலுள்ள நியூஸ் பெஸ்ட்டின் விசேட கலையகத்தில் திரைப்பரீட்சை மற்றும் குரல் தேர்வு தற்போது ஆரம்பமாகியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்