கையடக்கத் தொலைபேசிகளில் தங்கம் கடத்தமுற்பட்டவர் கைது

கையடக்கத் தொலைபேசிகளில் தங்கம் கடத்தமுற்பட்டவர் கைது

கையடக்கத் தொலைபேசிகளில் தங்கம் கடத்தமுற்பட்டவர் கைது

எழுத்தாளர் Staff Writer

23 Aug, 2014 | 12:55 pm

இரண்டு கையடக்கத் தொலைபேசிகளில் மறைத்து தங்க கட்டிகளை கடத்துவதற்கு முற்பட்ட சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் தங்கத்தை சென்னைக்கு கொண்டுசெல்ல முற்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி குறிப்பிடுகின்றார்.

சுமார் 11 இலட்சத்து 55 ஆயிரம் ரூபா பெறுமதியான 231 கிராம் நிறையுடைய தங்க கட்டிகளை சுங்கப் பிரிவினர் இதன்போது பறிமுதல் செய்துள்ளனர்.

கந்தானை பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்க கட்டிகள் அரசுடைமையாக்கப்பட்டதுடன், 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்