ஐஸ் பக்கெட் சவாலை நிறைவேற்றிய சங்கக்கார, மஹேல (Video)

ஐஸ் பக்கெட் சவாலை நிறைவேற்றிய சங்கக்கார, மஹேல (Video)

எழுத்தாளர் Staff Writer

23 Aug, 2014 | 2:20 pm

உலகப் பிரபல்யங்கள் ஐஸ் பக்கெட் சவாலை ஏற்றுக் கொண்டது மட்டுமன்றி இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களும் இந்த சவாலை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதன்படி இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகிய இருவரும் ஐஸ் பக்கெட் விளையாடியுள்ளனர்.

இதனையடுத்து ஏஞ்ஜலோ மத்தியூஸ்- அவுஸ்திரேலிய நட்சத்திர வீரர் மைக்கல் கிளார்க் மற்றும் இந்திய நட்சத்திர வீரர் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு மஹேல ஜயவர்தனவினால் சவால் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குமார் சங்கக்காரவினால் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி- அவுஸ்திரேலிய வீரர் எடம் கிள்க்கிறிஸ்ட் மற்றும் தென்னாபிரிக்க வீரர் டேல் ஸ்டெய்ன் ஆகியோருக்கு இந்த ஐஸ் பக்கெட் சவால் விடுக்கப்பட்டுள்ளது.

பொதுநல காரியங்களுக்காக நிதி திரட்டும் நோக்கில் நடத்தப்பட்டுவரும் இந்த ஐஸ் பக்கெட் விளையாட்டின் ஊடாக நன்கொடை வழங்கத் தயாராக உள்ளதாக மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இது குறித்த காணொளி காட்சிகளை மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார தங்களது உத்தியோகபூர்வ பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்