உளவுத் தகவல்களைப் பகிர்வதற்கு இலங்கை – இந்தியா இணக்கம்!

உளவுத் தகவல்களைப் பகிர்வதற்கு இலங்கை – இந்தியா இணக்கம்!

உளவுத் தகவல்களைப் பகிர்வதற்கு இலங்கை – இந்தியா இணக்கம்!

எழுத்தாளர் Staff Writer

23 Aug, 2014 | 8:05 pm

போதைப் பொருள் கடத்தல்  தொடர்பான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த இலங்கையும் இந்தியாவும் இணங்கியுள்ளன.

இலங்கையின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பிரதிநிதிகளுக்கும் இந்தியாவின் தெற்கு வலையத்தில் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் தலைமை அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் இடையில்  இந்த விடயம் தொடர்பில் டெல்லியில் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் தொடர்பான புலனாய்வு தகவல்களை இருநாடுகளிடையும் பகிர்ந்துக் கொள்வதற்கு கலந்துரையாடலின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் பறிமாறிக் கொள்ளும் தகவல்களுக்கு அமைய போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் துரிதமாக சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் இருநாட்டில் ஏதேனும் ஒரு நாட்டிற்குள் பிரவேசிக்கும் சந்தர்பத்தில் அவர்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள இரு நாடுகளும் இணங்கியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்