இலங்கை – பாகிஸ்தான் ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை – பாகிஸ்தான் ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை – பாகிஸ்தான் ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

23 Aug, 2014 | 10:16 am

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது

மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் கிரிக்கட் தொடரின் முதலாவது போட்டி சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவுள்ளது

இந்தப் போட்டி இலங்கை நேரப்படி காலை 10 மணிளவில் ஆரம்பமாகவுள்ளது

பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் தொடரை 2க்கு பூச்சியம் என்ற ரீதியில் கைப்பற்றிய இலங்கை அணி சிறந்த மன நிலையுடன் இன்று களமி்றங்கவுள்ளது

இலங்கை அணியில் காயம் காரணமாக குசல் ஜனித் பெரோ அணியில் இணைக்கப்படவில்லையென்பதோடு டில்ருவன் பெரேராவும் இடம்பெறவில்லை நீண்ட காலத்திற்கு பின்னர் சுழற்பற்து வீச்சாளர் சுராஜ் ரந்தீவ் இலங்கை அணிக்கு மீள அழைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் உபுல் தரங்க மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோரும் அணிக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இலங்கை சார்பில் ஒருநாள் போட்டிகளில் திலகரத்ன டில்ஷானுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக உபுல் தரங்க களமிங்கவுள்ளார்.

இந்த ஒருநாள் தொடரை உலகக்கிண்ண போட்டிகளிற்கான பயிற்சிப் போட்டியாக கருதுவதாக அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் குறிப்பிட்டார்

பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் இர்பான இடம்பிடித்துள்ளதோடு சயீட் அஜ்மல் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பினை இழந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்