இரண்டாவது போட்டி ஹம்பாந்தோட்டைக்கு மாற்றம்

இரண்டாவது போட்டி ஹம்பாந்தோட்டைக்கு மாற்றம்

இரண்டாவது போட்டி ஹம்பாந்தோட்டைக்கு மாற்றம்

எழுத்தாளர் Staff Writer

23 Aug, 2014 | 7:33 pm

இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியை  எதிர்வரும் 26 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சூரியவெவ மகிந்த ராஜபக்ஷ மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டி  27 ஆம் திகதி கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில்  நடத்துவதற்கு  ஏற்கனவே அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது.

அண்மை நாட்களாக கொழும்பில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானத்தை எட்டியதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரவித்துள்ளது.

இதேவேளை இன்று இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றுள்ளது.

04 விக்கட்டுக்கள் மீதமுள்ள நிலையில் பாகிஸ்தான் அணி வெற்றியிலக்கை அடைந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்