யாழில் மீன்பிடியியல் டிப்ளோமா பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்

யாழில் மீன்பிடியியல் டிப்ளோமா பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2014 | 9:40 pm

யாழப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபை அலுவலகம் முன்பாக இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது.

2003 கல்வியாண்டிற்குப் பின்னரான மூன்று கல்வியாண்டுகளில் யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி
கற்று வெளியேறிய மீன்பிடியியல் டிப்ளோமா பட்டதாரிகளே இவ்வாறு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மூன்று கல்வியாண்டுகளையும் சேர்ந்த 60 இற்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

2003 ஆண்டிற்கு முன்னர் வெளியேறிய டிப்ளோமாதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டபோதும் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, தமது கல்வியாண்டினைச் சேர்ந்த சிலருக்கு அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

தமக்கான நியமனத்தினை வழங்கக்கோரி கவனஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட குறித்த பட்டதாரிகளுடன் அங்கு சமூகமளித்த மாகாணக் கல்வியமைச்சர் குருகுலராஐ கலந்துரையாடலை மேற்கொண்டார்.

மாகாணக் கல்வியமைச்சரிடம் மகஜர் ஒன்றையும் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் கையளித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்