மாத்தளை பொது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

மாத்தளை பொது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

மாத்தளை பொது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2014 | 12:03 pm

மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

சத்திர சிகிச்சைக் கூடத்தின் குளிரூட்டி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறினால் சத்திர சிகிக்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அர்ஜூன திலகரத்ன குறிப்பிட்டார்.

குளிரூட்டி கட்டமைப்பின் திருத்தப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், நாளைய தினத்திற்குள் அதனை நிறைவுசெய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கமைய, வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைகளை நாளைமுதல் வழமைபோன்று முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக டொக்டர் அர்ஜூன திலகரத்ன தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அவசர சத்திர சிகிக்சைகளை மேற்கொள்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்