பிரபா கணேசன் மற்றும் பீ.திகாம்பரம் பிரதியமைச்சர்களாக பதவிப்பிரமாணம்

பிரபா கணேசன் மற்றும் பீ.திகாம்பரம் பிரதியமைச்சர்களாக பதவிப்பிரமாணம்

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2014 | 1:21 pm

பாராளுமன்ற உறுப்பினர்களான பிரபா கணேசன் மற்றும் பீ திகாம்பரம் ஆகியோர் பிரதியமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

அலரி மாளிகையில் இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் இவர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

இதற்கமைய, தொலைத் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரதியமைச்சராக பிரபா கணேசனும், தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க பிரதியமைச்சராக பீ திகாம்பரமும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்