தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படும் – சுவசேவா சங்கம்

தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படும் – சுவசேவா சங்கம்

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2014 | 8:50 am

கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படுமென அகில இலங்கை சுவசேவா சங்கம் தெரிவிக்கின்றது.

தமது பிரச்சினைகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்காமையால், தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்வதாக சங்கத்தின் தலைவர் டீ ஜயலால் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், தமது உறுப்பினர்கள் இன்று காலை 6.30 முதல் தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டுள்ளதாக சுகாதார ஒன்றிணைந்த தொழிற்சங்க குழு குறிப்பிட்டது.

ஜனாதிபதியுடன் நேற்று மாலை நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கீத்திக்கா விஜேசூரிய கூறினார்.

ஆயினும், தமது சங்கத்தை இணைத்துக்கொள்ளாது நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலை ஏற்றுக்கொள்ள முடியாதென அகில இலங்கை சுவசேவா சங்கத்தின் தலைவர் டீ ஜயலால் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்