தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரச வளங்களை பயன்படுத்துவதாக முறைப்பாடு

தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரச வளங்களை பயன்படுத்துவதாக முறைப்பாடு

தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரச வளங்களை பயன்படுத்துவதாக முறைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2014 | 1:45 pm

ஊவா மாகாண சபைத் தேர்தலின் பிரசார நடவடிக்கைகளுக்கு அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அரச வளங்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.

இந்த விடயம் தொடர்பில் 10 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் பிரிவு குறிப்பிடுகின்றது.

இதேவேளை, அரச உத்தியோகத்தர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் சம்பவங்கள் தொடர்பில் 06 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டது.

ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் 33 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

சட்டவிரோத போஸ்டர், கட்அவுட்களை காட்சிப்படுத்துல் தொடர்பில் 10 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.

இதனைத்தவிர, அரசியற் காரணங்களுக்காக அரச உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்குவது தொடர்பிலும் 05 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்