தலவாக்கலையில்  ரயிலில் மோதி சிறுமி உயிரிழப்பு

தலவாக்கலையில் ரயிலில் மோதி சிறுமி உயிரிழப்பு

தலவாக்கலையில் ரயிலில் மோதி சிறுமி உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2014 | 1:38 pm

தலவாக்கலை – வட்டகொட பகுதியில் ரயிலில் மோதி சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

நாவலப்பிட்டியில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த ரயிலில் வட்டகொட பகுதியில் இன்று காலை 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்துக்குள்ளானதை அடுத்து சிறுமியை அதே ரயிலில் கொண்டுசென்று நானுஓயா ரயில் நிலையத்தில் ஒப்படைத்தபோது, அவர் உயிரிழந்திருந்ததாக ரயில் நிலைய பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இதனையடுத்து சம்பவம் குறித்து நானுஓயா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், சிறுமியின் உடலை நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்ததாகவும் அந்த பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நுவரெலியா வைத்தியசாலையுடன் தொடர்புகொண்டு வினவியபோது, ரயில் விபத்தில் உயிரிழந்த சிறுமியின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸ் பிரிவு உறுதிசெய்துள்ளது.

சிறுமியின் மரணம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்