ஜேம்ஸ் ஃபொலியை சிரச்சேதம் செய்வது தொடர்பான வீடியோ நம்பகமானது -அமெரிக்கா(VIDEO)

ஜேம்ஸ் ஃபொலியை சிரச்சேதம் செய்வது தொடர்பான வீடியோ நம்பகமானது -அமெரிக்கா(VIDEO)

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2014 | 10:22 am

தமது நாட்டு ஊடகவிலாளர் ஜேம்ஸ் ஃபொலியை சிரச்சேதம் செய்வது தொடர்பான வீடியோ நம்பகமானது என அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.

ஈராக்கில் அமெரிக்க நடத்தும் விமானத் தாக்குதலுக்கு  பதில் அளிக்கும் வகையில் குறித்த ஊடகவிலாளரை சிரச்சேதம் செய்யும் வீடியோ காட்சியை ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டிருந்தனர்.

அமெரிக்கா  ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய நாடுகள் இந்த கொலை தொடர்பில் தமது அதிர்ச்சியை வெளியிட்டிருந்தன.

துன்பப்படும் சிரிய மக்கள் தொடர்பில் உலகிற்கு வெளிப்படுத்த முயற்சித்தமைக்காக  தனது மகன் உயிரை அர்ப்பணித்துள்ளதாக ஃபொலியின் தாயார் கூறியுள்ளார்

அமெரிக்காவின் க்ளோபல் போஸ்ட் மற்றும் ஏ ஏப் பீ உள்ளிட்ட ஊடக நிறுவனங்களுக்கு அவர் செய்தியாளராக செயற்பட்டதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எச்சரிக்கை: கீழே உள்ள காணொளியை இதயம் பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்