ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2014 | 12:49 pm

கதிர்காமம் புதிய நகரில் போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்த ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் இருவர் மீதும் இனந்தெரியாதவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

போஸ்டர் ஒட்டுவதற்காக முச்சக்கர வண்டியில் சென்றவர்கள் மீது இன்று அதிகாலை 1.20 அளவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

சுமார் 40 பேரடங்கிய குழு தாக்குதல் நடத்தியதாக, தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்கு தெபரவெவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்