சுகாதார சேவை தொழிற்சங்கங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

சுகாதார சேவை தொழிற்சங்கங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

சுகாதார சேவை தொழிற்சங்கங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2014 | 7:21 am

சுகாதார சேவை தொழிற்சங்கங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சுகாதார துறையின் 27 பிரிவுகளை சேர்ந்த ஒன்றிணைந்த தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவினால் சமர்பிக்கப்பட்ட 5 யோசனைகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அவற்றிற்குரிய தீர்வுகளை தயாரித்து 3 மாதங்களில் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சுகாதார ஒன்றிணைந்த தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவினருடன் நேற்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்