சக்தி வளாகத்தின் நான்காம் நாள் நிகழ்வுகள் இன்று

சக்தி வளாகத்தின் நான்காம் நாள் நிகழ்வுகள் இன்று

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2014 | 9:23 am

தமிழ் பேசும் மக்களின் சக்தியாக விளங்கும் சக்தி எவ்.எம், சக்தி ரி.வி மற்றும் நியூஸ்பெஸ்ட்
ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள சக்தி வளாகத்தின் நான்காம் நாள் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.

தமிழ் மக்களின் பண்பாட்டிலும் வரலாற்றிலும் முக்கிய இடத்தை வகிக்கும் நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு தமிழ் பேசும் மக்களின் சக்தியாக விளங்கும் சக்தி எவ்.எம், சக்தி ரி.வி மற்றும் நியூஸ் பெஸ்ட் ஆகியன கடந்த 5 வருடங்களாக ஆலய வளாகத்தில் புதுமையான நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகின்றது.

இதேவேளை, நேற்றைய தினம் வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், அங்கு அமைக்கப்பட்டுள்ள சக்தி வளாகத்தில் மூன்றாம் நாள் நிகழ்வுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

உலகிலேயே மிகப் பிரமாண்டமான வெளியக வானொலிக் கலைகயம் இங்கு அமையப் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்