அனுமதிப் பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அனுமதிப் பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அனுமதிப் பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2014 | 7:39 am

போக்குவரத்து அனுமதிப் பத்திரமின்றி பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களுக்கு எதிராக எதிர்வரும் மூன்று வாரங்களில் சட்ட நடவடிக்கை  எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

இந்த நடவடிக்கைகளுக்காக பல குழுக்கள் நாடு பூராகவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ரேணுக பெரேரா தெரிவிக்கின்றார்.

குறிப்பாக யாழ்ப்பாணம் – கொழும்பு, வவுனியா – கொழும்பு ஆகிய மார்க்கங்களில், பயணிக்கும் பஸ்கள், போக்குவரத்து அனுமதி பத்திரமின்றி பயணிக்கின்றமை குறித்து அதிகளவில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நடவடிக்கையை தவிர்க்கும் வகையில், தற்காலிக அனுமதிப் பத்திரம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாத்திரம் ஒருநாள் அனுமதி பத்திரத்தை வழங்க, கொழும்பு – பெஸ்டியன் மாவத்தை பஸ் தரிப்பிட முகாமையாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக ரேணுக பெரேரா கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்