விநாயகர் சதுர்த்தியன்று பூர்த்தியாகவுள்ள அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு

விநாயகர் சதுர்த்தியன்று பூர்த்தியாகவுள்ள அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2014 | 2:04 pm

அஜித் ரசிகர்களின் நீண்டநாள் எதிர்ப்பார்ப்பு எதிர்வரும் விநாயகர் சதுர்த்தியன்று பூர்த்தியாகவுள்ளது.

ஆம், கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் திரைப்படத்தின்  தலைப்பு எதிர்வரும் விநாயகர் சதுர்தியன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

இதுவரை இந்தப் படத்திற்கு தலைப்பு வைக்கவில்லை எனினும் ‘தல 55’ என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்