விஜய் , தனுஸ் மோதல்?

விஜய் , தனுஸ் மோதல்?

விஜய் , தனுஸ் மோதல்?

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2014 | 10:11 am

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஸ் நடித்துவரும் ‘அநேகன்’ திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு விட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படத்தை தீபாவளி பண்டிகையன்று திரைக்கு கொண்டுவர இயக்குனர் கே.வி. ஆனந்த் மும்முரமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘கத்தி’ திரைப்படமும் தீபாவளியன்று வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதனால் இம்முறை தீபாவளியன்று விஜயின் ‘கத்தி’ மற்றும் தனுஷின் ‘அநேகன்’ திரைப்படங்கள் திரையில் மோதும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தின் வெற்றி ‘அநேகன்’ திரைப்படம் மீதான எதிர்ப்பார்ப்பினை அதிகரித்துள்ளது.

மேலும் ‘துப்பாக்கி’ திரைப்படத்தின் வெற்றிக் கூட்டணியான விஜய் மற்றும் முருகதாஸ் இணையும் ‘கத்தி’ திரைப்படத்தின் மீதும் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்