முப்பது ஆயிரத்திற்கும் அதிகமான சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்

முப்பது ஆயிரத்திற்கும் அதிகமான சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2014 | 12:15 pm

சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து, நாட்டிலுள்ள 27 துறைசார் சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தமக்கு உரிய தீர்வு வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் இதுவரை பதிலளிக்கவில்லை என தொழிற்சங்க ஒன்றியத்தின் ஒன்றிணைந்த குழுவின் ஒருங்கிணைப்பாளர் கீதிக்கா சுவர்ணலதா விஜேசூரிய குறிப்பிட்டார்.

முப்பது ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் பங்கெடுத்துள்ளதாக அவர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் கே ஏ எஸ் கீரகலவிடம் வினவியபோது, ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த விடயத்தினை தொழிற்சங்க ஒன்றியத்திற்கு தெரியப்படுத்திய போதிலும், தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்