பதவி விலகுவாரா தோனி?

பதவி விலகுவாரா தோனி?

பதவி விலகுவாரா தோனி?

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2014 | 10:43 am

இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி மற்றும் பயிற்றுவிப்பாளர் டங்கன் பிளச்சர் ஆகியோர் பதவி விலக வேண்டும் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்து அணிக்கெதிரான தொடர்ச்சியான டெஸ்ட் தோல்விகளை அடுத்து இந்திய ஊடகங்கள் இந்த விமர்சனங்களை வெளியிட்டுள்ளன.

லோட்சில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணிவரலாற்று ரீதியான வெற்றியை பதிவுசெய்த போதிலும் இறுதி மூன்று போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது.

இந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்த விதம் வருத்தம் அளிப்பதாக முன்னாள் வீரா்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளுக்கான தலைமைத்துவத்தில் தோனி தொடர்ந்தும் நீடிப்பது பயனற்ற ஒன்றென டைம்ஸ் ஒப் இண்டியா கூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்