ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் 27 முறைப்பாடுகள்

ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் 27 முறைப்பாடுகள்

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2014 | 9:27 am

ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் 27 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.

இந்த முறைப்பாடுகளில் 04, வன்முறைகள் தொடர்பானவை என செயலகத்தின் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் பிரிவு தெரிவித்தது.

பதிவான முறைப்பாடுகளில் அரச உத்தியோகத்தர்களை தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் 04 முறைப்பாடுகள் காணப்படுகின்றன.

கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் குறித்த பிரிவுகளை தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் 27 முறைப்பாடுகள் கெபே அமைப்பிற்கு பதிவாகியுள்ளன.

தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையத்திற்கு தேர்தல் தொடர்பில் 14 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

பொலிஸ் தேர்தல் பணியகத்திற்கு 06 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்