இபோலா நோயினைக் கட்டுப்படுத்த லைபீரியாவில் இரவு நேரத்தில் ஊரடங்குச் சட்டம்

இபோலா நோயினைக் கட்டுப்படுத்த லைபீரியாவில் இரவு நேரத்தில் ஊரடங்குச் சட்டம்

இபோலா நோயினைக் கட்டுப்படுத்த லைபீரியாவில் இரவு நேரத்தில் ஊரடங்குச் சட்டம்

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2014 | 1:38 pm

இபோலா நோயினைக் கட்டுப்படுத்துவதற்காக அவசரகால நடவடிக்கையாக லைபீரியாவில் இரவு நேர ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக லைபீரியாவின் ஜனாதிபதி எலன் ஜோன்சன் தெரிவித்தார்.

இதன்படி இரவு 9 மணியில் இருந்து காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இரவு நேரங்களில் மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்கு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி எலன் தெரிவித்துள்ளார்.

நோயைக்கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் கடந்த வாரம் 3 வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளதுடன் அவர்களின் தடுப்பு மருந்துக்கள் மூலம் நோயின் தாக்கம் குறைவடைவதாக லைபீரியாவின் தகவல்துறை அமைச்சர் தெரிவிக்கின்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்