யாழ். நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள சக்தி வளாகம் திறந்து வைப்பு

யாழ். நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள சக்தி வளாகம் திறந்து வைப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2014 | 8:57 pm

வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தை  முன்னிட்டு  அமைக்கப்பட்டுள்ள சக்தி வளாகம் இன்னும் சற்று நேரத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.

சக்தி வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வெளிப்புற கலையகத்தில் இருந்து சக்தி எவ் எம். இன்று காலை முதல் தமது நிகழ்ச்சிகளை நேரடியாக வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்று முதல் அலங்காரக் கந்தனின் இரதோற்சவப் பெருவிழா நடைபெறவுள்ள எதிர்வரும் 24 ஆம் திகதி வரை யாழ்.சக்தி வாளகத்தை பார்வையிடும் வாய்ப்பு நேயர்களுக்கு கிட்டவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் யாழ். நல்லூர் சக்தி வளாகத்திலுள்ள நியூஸ் பெஸ்ட்டின் விசேட கலையகத்தில் திரைப்பரீட்சை மற்றும் குரல் தேர்வு நடைபெறவுள்ளன.

இந்த திரைப்பரீட்சை மற்றும் குரல் தேர்விலிருந்து தெரிவு செய்யப்படும் இருவருக்கு நியூஸ்பெஸ்ட்டில் செய்தி வாசிப்பதற்கான அரிய வாய்ப்பு கிட்டவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்