மேல் மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக விசேட செயற்றிட்டம்

மேல் மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக விசேட செயற்றிட்டம்

மேல் மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக விசேட செயற்றிட்டம்

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2014 | 3:48 pm

மேல் மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கான விசேட செயற்றிட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவும் பகுதிகளை இலக்காக கொண்டு இன்றும் நாளையும் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் நிபுணத்துவ வைத்திய அதிகாரி நயனா டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

மழைக் காலத்தில் காய்ச்சல் பரவுவதை தடுப்பதே இதன் நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய கொழும்பு மாநகர சபை பிரதேசம், மஹரகம, ஹோமாகம, கம்பஹா, பாணந்துறை ஆகிய பகுதிகளில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்