மேல்மாகாணத்தில் சட்டவிரோத துப்பாக்கிகளை தேடும் நடவடிக்கை ஆரம்பம்

மேல்மாகாணத்தில் சட்டவிரோத துப்பாக்கிகளை தேடும் நடவடிக்கை ஆரம்பம்

மேல்மாகாணத்தில் சட்டவிரோத துப்பாக்கிகளை தேடும் நடவடிக்கை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2014 | 8:15 pm

மேல்மாகாணத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கிகள் வைத்திருப்போரை கைது செய்வதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக துப்பாகிகள் வைத்திருப்போர் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அஜித் ரோஹண இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தின் மூன்று பகுதிகளில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்களை அடுத்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்