மலேஷியாவில் கைதான இலங்கையர் தொடர்பான தகவல்களை வழங்குமாறு இந்தியா கோரிக்கை

மலேஷியாவில் கைதான இலங்கையர் தொடர்பான தகவல்களை வழங்குமாறு இந்தியா கோரிக்கை

மலேஷியாவில் கைதான இலங்கையர் தொடர்பான தகவல்களை வழங்குமாறு இந்தியா கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2014 | 8:59 am

பயங்கரவாத செயல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜை தொடர்பான தகவல்களை வழங்குமாறு மலேஷியாவிடம் இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது

இந்தியாவுக்கும் மலேஷியாவுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் இந்த தகவல்கள் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உறுப்பினர்களுடன் இணைந்து சென்னையிலுள்ள அமெரிக்க கொன்சூலர் அலுவலகம் மற்றும் பெங்களூரிலுள்ள இஸ்ரேல் தூதரகம் ஆகியவற்றின்மீது தாக்குதல் நடத்துவதற்கு இவர் திட்டமிட்டிருந்தாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மொஹமட் ஹூசைய்ன் மொஹமட் சுலைமான்  என்ற குறித்த இலங்கைப் பிரஜை    தொடர்பில் தெளிவான தகவல்கள் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என இந்தியாவின் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு  எதிராக சர்வதேச பொலிஸாரின் ஊடாக  சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக  குறித்த அதிகாரியை மேற்கோள்காட்டி த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மலேஷிய அதிகாரிகள் சந்தேகபரை கைது செய்ததை அடுத்து   இந்த தாக்குதல் சதித் திட்டம் தொடர்பில் தகவல்கள் கண்டறியப்பட்டதாக  இந்தியா தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மற்றுமொரு இலங்கை பிரஜையான ஷாக்கீர் ஹுசைய்ன் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஷாக்கீர் ஹுசைய்னிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது பண மோசடி மற்றும் தாக்குதல் சதித் திட்டங்களுடன் அவர் சம்பந்தப்பட்டமை தெரியவந்ததாக இந்தியாவின் மத்திய புலனாய்வுத்துறை அறிவித்துள்ளது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்