பொகவந்தலாவையில் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொகவந்தலாவையில் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொகவந்தலாவையில் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2014 | 1:21 pm

பொகவந்தலாவை ச்செபல்டன் தோட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் சிலர் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மாணிக்கக்கல் அகழ்வதற்கான அனுமதிப் பத்திரம் வழங்கும் ஏலத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 25 வீதம் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பொகவந்தலாவையில் மீண்டும் மாணிக்கக்கல் அகழ்விற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் ஏலத்தை எதிர்வரும் 28 ஆம் திகதி நடத்துவதற்கு தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை திட்டமிட்டுள்ளது.

இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 10 வீதம் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த முடிவு தமக்கு திருப்தியளிக்கவில்லை என இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் கூறினர்

மாணிக்கக்கல் அகழ்விற்கான அனுமதிப் பத்திரங்களை விநியோகிக்கும் ஏலத்திற்கு எதிராக பொகவந்தலாவை நகரில் இன்று முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் நேற்று தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையிலேயே தோட்டத் தொழிலாளர்கள் ச்செபல்டன் தோட்டத்தில் ஒன்றுகூடி  இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்