பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இடைநிறுத்த இந்தியா தீர்மானம்

பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இடைநிறுத்த இந்தியா தீர்மானம்

பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இடைநிறுத்த இந்தியா தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2014 | 10:12 pm

பாகிஸ்தானுடனான இராஜதந்திர மட்ட பேச்சுவார்த்தையினை நிறுத்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது

பாகிஸ்தானுடனான வெளியுறவு செயலாளர் மட்ட பேச்சுவார்த்தையினை கைவிட தீர்மானித்ததாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது

காஷ்மிர் எல்லைப் பகுதியில் மோதல்களில் ஈடுபட்டு வரும் கிளர்ச்சியாளர்களுடன் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதுவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டமை தேவையற்ற விடயமென என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்

இந்தியாவின் எச்சரிக்கையை மீறி பாகிஸ்தான் தூதுவர் கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டமை குறிப்பிடத்க்கது

இந்தியாவின் உள்ளக விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவது உகந்ததல்ல எனவும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் குறிப்பிட்டுள்ளார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்