நான்காவது பாதுகாப்பு மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பம்

நான்காவது பாதுகாப்பு மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பம்

நான்காவது பாதுகாப்பு மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2014 | 7:26 am

இலங்கையின் அபிவிருத்தி பயணத்தில் எதிர்நோக்கப்படுகின்ற பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து ஆராயும் நான்காவது பாதுகாப்பு மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதிகள் ஏற்கனவே   வருகைதந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த மாநாடு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மலேஷியா, இந்தோனேஷியா மற்றும் ஐ​ரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 120 பிரதிநிதிகள் இம்முறை மாநாட்டில் கலந்துகொள்வதாக பிரிகேடியர் ருவன் வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சமாதான சூழல் அபிவிருத்திக்கு வழங்கும் பங்களிப்பு தொடர்பிலும், கடந்த சில வருடங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் இன்று ஆரம்பமாகவுள்ள மாநாட்டில் கலந்தாலோசிக்கப்படவுள்ளது.

அத்தோடு நாட்டுக்கு எதிரான சக்திகளை எதிர்கொள்வதற்கு ஏற்ற உள்ளக இயலுமையை அடிப்படையாக கொண்ட பாதுகாப்பு கொள்கையின்  முக்கியத்தும் குறித்தும் இந்த மாநாட்டில் ஆராயப்படவுள்ளதாக பிரிகேடியர் ருவன் வணிகசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்