நவகமுவயில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை

நவகமுவயில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை

நவகமுவயில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2014 | 7:46 am

நவகமுப பட்டேவல சந்தியில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு 8.45 அளவில் ரி 56 ரக துப்பாக்கியால் சந்தேகபர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த 27 வயதான இளைஞன் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 19 வயதான இளைஞன் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பற்றைக்காடொன்றுக்குள் கைவிடப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரத்மலானை மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளிலும் நேற்று மேலும் இரண்டு துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

இந்த சம்பவங்களில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததுடன் 16 வயது சிறுவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்