சிகிரியாவில் குளவிக்கொட்டை கட்டுப்படுத்த கொரியா தொழில்நுட்பம்

சிகிரியாவில் குளவிக்கொட்டை கட்டுப்படுத்த கொரியா தொழில்நுட்பம்

சிகிரியாவில் குளவிக்கொட்டை கட்டுப்படுத்த கொரியா தொழில்நுட்பம்

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2014 | 10:52 am

சிகிரியாவில் குளவிக்கொட்டை கட்டுப்படுத்துவதற்கு கொரியாவின் தொழில்நுட்பத்தை பயன்படுத்த கலாசார மற்றும் கலை விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய குளவிகளுக்கு மாத்திரம் கேட்கும் ஒலியை பயன்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் டீ.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் மூலம்   குளவிகூட்டிலிருந்து குளவிகள் கலைந்து செல்வதை  தடுக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக சிகிரியாவை பார்வையிடச் சென்ற    உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பலர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியிருந்தமை  குறிப்பிட்டத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்