“சதுர்கட லய சமர்ப்பணம்” நிகழ்ச்சி யாழில் நடைபெற்றது

“சதுர்கட லய சமர்ப்பணம்” நிகழ்ச்சி யாழில் நடைபெற்றது

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2014 | 9:33 pm

மண்டலின் சிவகுமாரின் லலித ஷேத்ரா வழங்கும் ‘சதுர்கட லய சமர்ப்பணம்’ நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் இன்று  நடைபெற்றது.

கிரமி விருது வென்ற பிரபல இந்தியக் கலைஞர் விக்கு விநாயகம் கலந்து சிறப்பித்த இந்த நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

பத்மஸ்ரீ விக்கு விநாயகத்தின் பங்குப்பற்றுதலுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில், இசை ரசிகர்களின் மனங்கனை கொள்ளை கொள்ளும் வகையில் கடம் இசைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அணிசேர் கலைஞர்களாக பங்குபற்றியவர்களும் பங்குப்பற்றியிருந்தனர்.

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்த பத்மஸ்ரீ விக்கு விநாயகம் தன்னுடைய கட வாசிப்பில் இரசிகர்களை இலயிக்கச் செய்தார்.

மண்டலின் சிவகுமாரின் லலித ஷேத்ரா வழங்கும் ‘சதுர்கட லய சமர்ப்பணம்’ நிகழ்ச்சி கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்