கொலன்னாவை நகர சபையின் தலைவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

கொலன்னாவை நகர சபையின் தலைவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2014 | 4:08 pm

கொலன்னாவை   நகர சபையின் தலைவர் ரவீந்திர உதயசாந்தவை  விளக்கமறியலில் வைக்குமாறு  கொழும்பு நீதவான்  நீதிமன்றம்  இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொலன்னாவை  நகர சபையின் உப தலைவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில்  அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

கொலன்னாவை  சபைத் தலைவரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து,   எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்