கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2014 | 7:37 pm

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்கள் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருகோணமலை வளாகத்தின் முன்னாள் முதல்வர் வைத்திய கலாநிதி வர்ணகுலேந்திரனை மீண்டும் வளாக முதல்வராக நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக கிழக்கு பல்கலைகழகத்தின் உபவேந்தர் கலாநிதி கிட்ணர் கோபிந்தராஜா தெரிவித்தார்.

எனினும் மாணவர்கள் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு சென்று இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமை தொடர்பில் பல்கலைகழக நிர்வாகத்திற்கு
எவ்வித அறிவிப்புக்களையும் விடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், திருகோணமலை வளாக முன்னாள் முதல்வரை மீண்டும் அவரது பதவிக்கு நியமிப்பது செய்வது தொடர்பில் பல்கலைகழக பேரவையே தீர்மானிக்கும் என உப வேந்தர் கூறினார்.

திருகோணமலை வளாக முன்னாள் முதல்வர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கிழக்கு பல்கலைகழகத்தின் உபவேந்தர் கலாநிதி கிட்ணர் கோபிந்தராஜா சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்