உள்ளக நடவடிக்கைகளின் ஊடாகவே நாட்டில் நல்லிணக்கத்தை எட்ட முடியும்- ஜீ.எல் பீரிஸ்

உள்ளக நடவடிக்கைகளின் ஊடாகவே நாட்டில் நல்லிணக்கத்தை எட்ட முடியும்- ஜீ.எல் பீரிஸ்

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2014 | 9:09 pm

உள்ளக நடவடிக்கைகளின் ஊடாகவே நல்லிணக்கத்தை எட்ட முடியும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பிரிஸ் தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு மாநாட்டின் கலந்துக் கொண்டப்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பிரிஸ் தெரிவித்த கருத்து:-

“சர்வதேச விசாரணைக்கான சூழ்நிலை இல்லை. இது பக்கசார்பற்ற விசாரணை அல்ல. இதனடிப்படையில் விசாரணையில் கலந்துகொண்டால் அரசாங்கத்தை தெரிவு செய்த மக்களை அசௌகரியபபடுத்தும் நடவடிக்கையாகும். இந்த விசாரணைக்கு முன்வைக்கின்ற சாட்சிகள் மீள்பரிசீலனை செய்வதற்கு யாருக்கும் சந்தர்ப்பம் இல்லை. இது விசாரணை அல்ல நியாயத்தில் குளறுபடிகளை ஏற்படுத்துகின்ற ஒரு விடயம்.  உள்ளக நடவடிக்கைகளின் ஊடாகவே நல்லிணக்கத்தை எட்ட முடியும்.”

வருடாந்தம் நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டின் நான்காவது மாநாட்டில், யுத்தத்தின் பின் அபிவிருத்தி மற்றும்  மக்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

வெளிநாட்டு பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள், நிபுணர்கள் உள்ளிட்ட துறை சார் அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த மாநாடு இன்று முற்பகல்  அரம்பமானது.

ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ, திறைசேரியின் செயலாளர் காலாநிதி ரி.பி ஜயசுந்தர, இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க, உள்ளிடடவர்கள மாநாட்டில் கலந்துகொண்டதுடன், அவர்களும் இந்த மாநாட்டில உரையாற்றினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்