பாகிஸ்தான் 105 ஓட்டங்களால் தோல்வி: தொடரை வென்றது இலங்கை

பாகிஸ்தான் 105 ஓட்டங்களால் தோல்வி: தொடரை வென்றது இலங்கை

பாகிஸ்தான் 105 ஓட்டங்களால் தோல்வி: தொடரை வென்றது இலங்கை

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2014 | 11:30 am

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை 105 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் 271 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 165 ஓட்டங்களுக்கு தனது சகல விக்கெட்டுகளை இழந்தது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை தமது முதல் இன்னிங்சில் 320 ஓட்டங்களைப் பெற்றதுடன் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 332 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை தனது இரண்டாவது இனிங்ஸில் 282 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது, இந்நிலையில் 270 ஓட்டங்கள் என்ற இலக்கு பாகிஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த போட்டி மஹேல ஜயவர்தனவின் இறுதி டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்