இங்கிலாந்து தொடரில் விராட் கோலியின் எதிர்மறையான சாதனைகள்

இங்கிலாந்து தொடரில் விராட் கோலியின் எதிர்மறையான சாதனைகள்

இங்கிலாந்து தொடரில் விராட் கோலியின் எதிர்மறையான சாதனைகள்

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2014 | 6:16 pm

இங்கிலாந்திடம் இந்தியா 1க்கு3 என்று டெஸ்ட் தொடரை இழந்ததையடுத்து எதிர்மறையாக சில சுவையான புள்ளி விவரங்கள் கிடைத்துள்ளது.

இதற்கு முன்பாக 1974ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்திடம் 42 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த போது 17 ஓவர்களைச் சந்தித்தது. நேற்று ஓவலில் இந்தியா 29.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 6 முறை இதுபோன்று மிகக்குறைந்த ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுள்ளது.

india- england

5 டெஸ்ட் போட்டிகள் அல்லது 10 இன்னிங்ஸ்களை விளையாடியுள்ள விராட் கோலி 134 ஓட்டங்களை எடுத்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 2ஆம் இடம் பிடித்துள்ளது.

virat-kohli-tumbles-out-of-top-10-in-latest-icc-test-rankings-

இந்த பட்டியலில் முதலிடமும் இந்தியருக்கே. 1947-48 தொடரில் ஆவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் சந்து சர்வடே ஒரே தொடரில் 10 இன்னிங்ஸ்களில் வெறும் 100 ஓட்டங்களையே எடுத்திருந்தார். கோலி தற்போது 2ஆம் இடத்தில் உள்ளார். அடுத்த சச்சின் என்று வர்ணிக்கப்பட்ட ஊடகங்களுக்கு எதிரான புள்ளி விவரமாகும் இது என்பது குறிப்பிடத்தக்கது.

image_20131114115441

பி.எச். பஞ்சாபி என்ற மற்றொரு இந்திய வீரர், அதிகம் அறியப்படாத இவர் கூட பாகிஸ்தானுக்கு எதிராக 1954/55 தொடரில் 5 டெஸ்ட், 10 இன்னிங்ஸ் தொடரில் 164 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

மேலும் விசித்திரமானது தவான், கோலி ஆகியோரது தனிப்பட்ட ஓட்ட எண்ணிக்கையை விட உதிரிஓட்டங்கள் அதிகம். இந்தியாவுக்கு 177 ஓட்டங்கள் இந்தத் தொடரில் உதிரிகளாக கிடைத்துள்ளது.

kohli_pujara

புஜாராவின் இந்த டெஸ்ட் தொடர் சராசரி 22.2. இந்திய அணியில் 3ஆம் நிலையில் களமிறங்கிய ஒரு வீரர் குறைந்தது 5 இன்னிங்ஸ்களில், இங்கிலாந்தில் எடுக்கும் ஆகக் குறைந்த சராசரியாகும்.

இவ்வாறு பல எதிர்மறையான சதனைகளின் தொடராக  இந்திய அணிக்கு இங்லாந்து தொடர் அமைந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்