இங்கிலாந்து அணி அபார வெற்றி

இங்கிலாந்து அணி அபார வெற்றி

இங்கிலாந்து அணி அபார வெற்றி

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2014 | 8:18 am

கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கெதிரான  டெஸ்ட் தொடரை 3 க்கு 1 என்ற ஆட்டக்கணக்கில் இங்கிலாந்து அணி சுவீகரித்துள்ளது.

லண்டன் ஒவல் மைதானத்தில் நடைபெற்ற தொடரின் 5 ஆவதும் இறுதியுமான போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 244 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

191691

போட்டியின் மூன்றாம் நாளான இன்று இரண்டாம் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 94 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

தனது முதல் இன்னிங்ஸ்சை இன்று தொடர்ந்த இங்கிலாந்து அணி 486 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஜோ ரூட் 149 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றதுடன் இஷாந் ஷர்மா நான்கு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸ்சில் 148 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்