அமெரிக்காவில் பேர்கியூசன் நகரில் இரண்டாவது நாளாகவும் ஊரடங்கு சட்டம் அமுல்

அமெரிக்காவில் பேர்கியூசன் நகரில் இரண்டாவது நாளாகவும் ஊரடங்கு சட்டம் அமுல்

அமெரிக்காவில் பேர்கியூசன் நகரில் இரண்டாவது நாளாகவும் ஊரடங்கு சட்டம் அமுல்

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2014 | 2:55 pm

அமெரிக்காவின் மிசோரி மாநிலத்திலுள்ள பேர்க்யூசன் நகரில் இரண்டாவது நாளாகவும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கறுப்பின இளைஞர் ஒருவரை பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவத்தை அடுத்து மாநிலத்தில் கடந்த ஒருவாரமாக தொடர்ச்சியான ஆர்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.

அத்துடன் புறநகர் பகுதியான சென் லூசியாவிலும் கடந்த ஒருவாரமாக பதற்றம் நிலவுவதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மிச்சேல் பிரவுண் என்ற குறித்த கறுப்பின இளைஞரின் உடலில் ஆறு துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் காணப்பட்டதாக ஆரம்ப கட்ட உத்தியோகபூர்வ பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 18 வயதான குறித்த இளைஞரின் அரச பிரேத பரிசோதனையை விரைவில் மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் எரிக் ஹோல்டர் உத்தரவிட்டுள்ளார்.

மைக்கல் பிரவுண் சுடப்படுவதற்கு முன்னர் கடையொன்றை அவர் கொள்ளையிடுவதாக காட்டும் சி சி ரி வி விடியோ காட்சியொன்றை பொலிஸார் வெளியிட்டிருந்தனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்