விடுதலையான தமிழக மீனவர்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

விடுதலையான தமிழக மீனவர்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

விடுதலையான தமிழக மீனவர்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Aug, 2014 | 10:59 am

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 94 மீனவர்களும் தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விடுத்த பணிப்புரைக்கு அமைய குறித்த 94 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த மீனவர்கள்  தமிழகத்தின் இராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.

காங்கேசந்துறை மற்றும் தலைமன்னாரை அண்மித்த சர்வதேச கடல் எல்லையில் வைத்து குறித்த 94 தமிழக மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் நேற்று இந்திய கரையோர பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் 74 மீனவர்கள் தமிழகத்தின் காரைக்கால் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டதாக இராமேஸ்வரத்தில் உள்ள எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

எஞ்சிய 20 மீவர்களும் மண்டபம் கடலோர காவல்படை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்தும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்