யாழில் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் கைது

யாழில் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் கைது

யாழில் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் கைது

எழுத்தாளர் Staff Writer

17 Aug, 2014 | 9:34 pm

யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவில் 16 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சிறுமியை பாழடைந்த வீடொன்றினுள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் குறித்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

34 வயதான குறித்த சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்