மஹேல இறுதி டெஸ்ட் போட்டியில் அரைச்சதம்

மஹேல இறுதி டெஸ்ட் போட்டியில் அரைச்சதம்

மஹேல இறுதி டெஸ்ட் போட்டியில் அரைச்சதம்

எழுத்தாளர் Staff Writer

17 Aug, 2014 | 2:18 pm

இலங்கையின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தனது இறுதி டெஸ்ட் போட்டியில் அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.

கொழும்பு எஸ் எஸ் சி மைதானத்தில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுடனான டெஸ்ட்  போட்டியில் மஹேல ஜயவர்தன 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தனது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்படுத்தாடிவரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரை சகல விக்கெட்டுகளையும் இழந்து 282 ஓட்டங்களை பெற்றனர்.

இன்றைய நாள் ஆட்டத்தை ஆரம்பித்த மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஜோடி மூன்றாம் விக்கட்டுக்காக 100 ஓட்டங்களை கடந்தது.

டெஸ்ட் போட்டிகளில் மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஜோடி இணைப்பாட்டமாக நூறு ஓட்டங்களை பெற்ற 19 ஆவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

குமார் சங்கக்கார 59 ஓட்டங்களுடன் சயீட் அஜ்மலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்