மஸ்கெலியாவில் புலமை பரீசில் பரீட்சைக்கு மாணவர்கள் செல்வதில் சிக்கல்

மஸ்கெலியாவில் புலமை பரீசில் பரீட்சைக்கு மாணவர்கள் செல்வதில் சிக்கல்

மஸ்கெலியாவில் புலமை பரீசில் பரீட்சைக்கு மாணவர்கள் செல்வதில் சிக்கல்

எழுத்தாளர் Staff Writer

17 Aug, 2014 | 2:45 pm

மஸ்கெலியா சாமிமலை மற்றும் காட்மோர் பகுதிகளிலுள்ள மாணவர்கள் இன்று புலமை பரீசில் பரீட்சை நிலையங்களுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது

பரீட்சை நேரத்திற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னர் பரீட்சை நிலையத்திற்கு செல்ல வேண்டிய போதிலும், குறித்த பகுதியிலுள்ள  50க்கும் அதிகமான மாணவர்கள் பரீட்சைக்கு சுமார் அரை மணித்தியாலம் தாமதமாகி சென்றுள்ளனர்.

சாமிமலை மற்றும் காட்மோர் பகுதிகளில் இன்று காலை உரிய நேரத்திற்கு பஸ் சேவை காணப்படாமையே தங்களின் பிள்ளைகள் பரீட்சைக்கு தாமதமாகி சென்றமைக்கான  காரணம் என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

வழமையாக காலை ஆறு முப்பது தொடக்கம் 30 நிமிடங்களுக்கு ஒரு தடவை பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்ற போதிலும் இன்று ஒரு சில பஸ்  சேவைகளில் தாமதம் நிலவியதாகவும் சில பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக காடமோர் தோட்டத்திலிருந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவை  இடம்பெறாமை பெற்றோர்கள் மத்தியில்  விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஹட்டன் பஸ் டிப்போவின் கடமைநேர அதிகாரியிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது…

ஹட்டன் – சாமிமலைக்கிடையிலான பஸ் சேவை இடம்பெற்ற போதிலும் அவற்றில் ஏற்பட்ட காலதாமதம் தொடர்பில் தமக்கு அறியக்கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

எனினும் காட்மோர் தோட்டத்திற்கான பஸ் பழுதடைந்துள்ளதால் கடந்த இரண்டுநாட்களாக அந்த பகுதிக்கான  பஸ் சேவை இடம்பெறவில்லை எனவும் ஹட்டன் பஸ் டிப்போவின் கடமைநேர அதிகாரி குறிப்பிட்டார்.

காட்மோர் தோட்டத்தில் புலமை பரீசீல் பரீட்சைக்கு தோற்றும்  ஐந்தாம் தர மாணவர்களின் நலன் கருதி பஸ் சேவையை ஏன் முன்னெடுக்கவில்லை என நியூஸ்பெஸட் ஹட்டன் டிப்போவிடம் வினவியது….

தமது டிப்போவில் போதுமான அளவு பஸ்கள் இல்லை எனவும் பழுதடைந்த பஸ்ஸை , மீண்டும் சேவையில் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அவை பயனளிக்கவில்லை எனவும் ஹட்டன் பஸ் டிப்போவின் கடமைநேர அதிகாரி சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்