நான்காவது பாதுகாப்பு மாநாடு நாளை கொழும்பில்

நான்காவது பாதுகாப்பு மாநாடு நாளை கொழும்பில்

நான்காவது பாதுகாப்பு மாநாடு நாளை கொழும்பில்

எழுத்தாளர் Staff Writer

17 Aug, 2014 | 2:10 pm

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையை நிறைவுக்கு கொண்டுவந்ததன் பின்னர் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பில் ஆராயும் நான்காவது பாதுகாப்பு மாநாடு நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது

இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை தருவதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்

பாதுகாப்பு மாநாடு நாளை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது

இந்தியா,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,மலேஷியா,இந்தோனிஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட 60 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துக்கொள்ளவுள்ளதாகவும் ருவன் வணிகசூரிய மேலும் தெரிவித்தார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்