நான்காம் நாள் ஆட்டம் நிறைவு; தொடரும் இலங்கையின் ஆதிக்கம்

நான்காம் நாள் ஆட்டம் நிறைவு; தொடரும் இலங்கையின் ஆதிக்கம்

எழுத்தாளர் Staff Writer

17 Aug, 2014 | 9:59 pm

கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரை முழுமையாக கைப்பற்றும் வாய்ப்பு  இலங்கை அணிக்கு அதிகரித்துள்ளது

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் 271 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி இன்றைய 4 ஆம் நாள் ஆட்டநேர நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 127 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

தனித்து நின்று பேராடும் சப்ஃராஸ் அஹமட் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களைப் பெற்றிருந்ததுடன் அசாட் ஷபீக் 32 ஓட்டங்களைக் குவித்தார்,.

2 ஆம் இன்னிங்ஸ்சிலும் சிறப்பாக பந்துவீசிய ரங்கன ஹேரத் நான்கு விக்கெட்டுக்களையும் தம்மிக்க பிரசாத் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

போட்டியில் தனது 2 ஆம் இன்னிங்ஸ்சை இன்று தொடர்ந்த இலங்கை அணியின் அனைத்து விக்கெட்டுகளும் 282 ஓட்டங்களுக்குள் சரிந்தன.

இலங்கை அணி 96 ஒட்டங்களுக்கு இறுதி 8 விக்கெட்டுக்களையும் இழந்தமை குறிப்பிடதக்கதாகும்

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை தமது முதல் இன்னிங்சில் 320 ஓட்டங்களைப் பெற்றதுடன் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 332 ஓட்டங்களைப் பெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்